#SLvBAN வெற்றியை நெருங்கும் இலங்கை..!

பங்களாதேஷ் அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (2) முடிவடைந்தது.

511 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற மாபெரும் இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி வரும் ஹசன் 44 ஓட்டங்களையும், தைஜுல் இஸ்லாம் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன்படி, போட்டியில் வெற்றி பெற இன்னும் 243 ஓட்டங்கள் பெற வேண்டும்.

தொடக்க ஆட்டக்காரர்கள் மஹ்முதுல் ஹசன் ஜாய் 24 , ஜாகிர் ஹசன் 19 ல் ஆட்டமிழந்தனர். கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 20 மட்டுமே எடுத்தார். மொமினுல் ஹக் 50 எடுத்தார்.

நான்காவது விக்கெட்டாக மொமினுல் ஆட்டமிழந்த பிறகு, ஐந்தாவது விக்கெட்டுக்கு ஷாகிப் அல் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் 61 (99) பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர், மேலும் கமிது மெண்டிஸ் அந்த பார்ட்னர்ஷிப்பை முறியடிக்க முடிந்தது.

பந்துவீச்சில் லஹிரு குமார, பிரபாத் ஜயசூரிய மற்றும் கமிது மெண்டிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

சிட்டகாங்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 531  குவித்தது. பதிலுக்கு வங்கதேசம் 178 எடுத்தது.

 

 

Previous articleICC T20 Worldcup- ஸ்டோக்ஸ் விலகல்..!
Next articleமாயங் யாதவ் ஒரு தங்கம்! அவரை வீணடிச்சிறாதீங்க! உடனே இந்த நாட்டுக்கு அனுப்புங்க.. தமிழக வீரர் கருத்து