வரலாற்றில் மறக்க முடியாத இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் 2 பந்துகள் மீதமிருக்க 1 விக்கெட் வித்தியாசத்தில்இலங்கை அணி வீழ்த்தியது.
இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பந்துவீச்சை நடுவர் ரோஸ் எமர்சன், பந்தை எறிவதாக குற்றம்சாட்டிய சம்பவம் இந்த போட்டியில் தான் நடைபெற்றது.
அர்ஜுனா சீறிப்பாய்ந்து முரளியை காத்ததும், நடுவரைப் பார்த்து கைவிரலை நீட்டி கர்சித்ததும் இந்தப் போட்டியில்தான்.
இங்கிலாந்து 302/3 என்ற ஓட்ட எண்ணிக்கையிப் பெற்றுக் கொள்ள இலங்கை ஒரு விக்கெட்டுடன் இலக்கை எட்டியது.
பதிலுக்கு ஆடிய இலங்கை அணி சார்பில் மஹேல தனது முதல் ஒருநாள் சதத்தை அடித்தார் , சனத், அர்ஜுனா , சந்தன ஆகியோரும் அவருக்கு சிறந்த ஆதரவை வழங்கினர்.
சர்சையின் நாயகனாக திகழ்ந்த முரளி இரு பந்துகள் மீதமிருக்க வெற்றிக்கான ஒத்ததை பெற்று அணியை வெற்றிபெற செய்தார்.
வரலாற்றில் மறக்க முடியாத இன்னுமொரு போட்டி இலங்கை ரசிகர்களுக்கு.