#SLvIND-இந்தியர்களுக்கு மரண பயத்தை காண்பித்தது இலங்கை- சாமிக்க கருணாரத்ன அதிரடி விளாசல்…!

இந்தியர்களுக்கு மரண பயத்தை காண்பித்தது இலங்கை- சாமிக்க கருணாரத்ன அதிரடி விளாசல்…!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியினருக்கு மரண பயத்தை காட்டிய இலங்கை அணி பலமான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்டது.

நாணய சுழற்சியில் வேற்றுப்பெற்று துடுப்பாடிய இலங்கை அணிக்கு, ஆரம்ப வீரர்களான மினோத் பானுக்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் 77 ஓட்டங்கள் இணைப்பாட்டம் புரிந்தனர்.

இறுதி நேரத்தில் கடந்த போட்டியைப் போன்று சாமிக்க கருணாரத்ன அதிரடியில் அசத்த இலங்கை அணி 9 விக்கெட்களை இழந்து 275 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

276 எனும் வெற்றி இலக்கு ஆர் .பிரேமதாச மைதானத்தில் கடுமையான வெற்றி இலக்காக கணிக்கப்பட்டுள்ளமையால் இலங்கை அணி வெற்றிக்கு முயற்சிக்கலாம் என்றே நம்பப்படுகின்றது.

இலங்கை அணி.

அவிஷ்கா பெர்னாண்டோ, மினோத் பானுக (wk), பானுக ராஜபக்ச, தனஞ்சய டீ சில்வா , சரித் அசலங்க, தசுன் ஷனாக (c), வாணிந்து ஹசரங்க, சமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீரா, கசுன் ராஜித, லக்ஷன் சந்தகன்

இந்தியா

ப்ரித்வி ஷா, ஷிகர் தவான் (c), இஷான் கிஷன் (wk), மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியா, குருநல் பாண்டியா, புவனேஸ்வர் குமார், தீபக் சஹர், குல்தீப் யாதவ் , சஹால்