இந்தியாவை சந்திக்கவுள்ள இலங்கை T20 அணி அறிவிப்பு…!
இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு 3 T20 போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
இதற்கான 18 பேர் கொண்ட அணி தசுன் சானக தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பானுக ராஜபக்ச உடல்தகுதி பிரச்சனை காரணமாக அணியில் இணைக்கப்படவில்லை, அஷென் டானியல் எனும் புதுமுகம் வாய்ப்பு பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலிய தொடரில் பங்கேற்ற இலங்கை அணி அங்கு தொடரை 1-4 என இழந்தது. குறித்த தொடரில் பங்கேற்று உபாதைக்குள்ளான அவிஷ்க பெர்னாண்டோ, ரமேஷ் மெண்டிஸ், நுவான் துஷார ஆகியோர் தாயகம் திரும்பியுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இரு அணிகளுக்குமான தொடர் வரும் 24 ம் திகதி லக்னோவில் ஆரம்பிக்கவுள்ளது.
அணி விபரம் ?