இந்த வெற்றி ஏன் மிக்க மகிழ்ச்சியாக இனிக்கின்றது? ஏன் அதிகம் கொண்டாடப்பட வேண்டியது?
ஜெயசூர்ய என்கின்ற இலங்கை அணியின் சாம்பியன் வீரன் அணியின் பயிறறுவிப்பாளராக ஆரம்பித்த தொடர் என்பதாலா?
மிகப் பலம் பொருந்திய இந்திய அணியை வெற்றி கொண்டதாலா?
முதல் வரிசை பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இரண்டாம் தர பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு வெற்றி பெற்றதாலா?
எல்லாத் தொடர்களிலும் தொடர்ந்து தோற்றுக் கொண்டு இருக்கும் ஒரு அணி மிக நீண்ட காலத்துக்குப் பின்பு பெற்ற வெற்றி என்பதாலா?
இல்லை. இவை யாவுமே குறுகிய கால நன்மைகள்/ நோக்கங்கள்.
முக்கியமாக இந்த வெற்றி கொண்டாடப்பட வேண்டியது எதற்காக என்றால்….
இலங்கை அணிக்கு ஒரு சிறந்த தலைவன் கிடைத்திருக்கின்றான். ஒரு சரியான தலைவன் தூர நோக்கில் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பான். இலங்கை கிரிக்கெட் தேடிக் கொண்டிருந்த அந்தத் தலைவன் சரித் அசலங்க.
பந்துவீச்சாளர்களை மாற்றுவதிலாகட்டும்; களத்தடுப்பு வியூகங்களிலாகட்டும்; தானே துணிந்து பந்தை கையில் எடுத்து, விக்கட்களை சரிப்பதிலாகட்டும்; கூலாக ஒரு போட்டியினை அணுகு வதிலாகட்டும் சரித் தனித்து மிளிர்கின்றான்.
மூன்று வருடங்களுக்கு எந்த மாற்றமும் செய்யாமல் சரித்துடன் இலங்கை கிரிக்கெட் பயணம் செய்ய வேண்டும். இனி எல்லாம் சுபமே..
✍️ A R Thiruchchenthooran