#SLvIND இலங்கை அணியில் இரு மாற்றங்கள்…!

#SLvIND காயம் ஏற்பட்டுள்ளதால், மதீஷ பத்திரன மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார்கள். 🚨

பயிற்சியின் போது தில்ஷான் மதுஷங்கவுக்கு இடது தொடையில் காயம் (தரம் 2) ஏற்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது பிடியை எடுக்க முயற்சி செய்யும்போது பத்திரனாவுக்கு வலது தோள்பட்டையில் லேசான சுளுக்கு ஏற்பட்டது.

இதனால் கிரிக்கெட் தேர்வாளர்கள் மேற்கூறிய இருவருக்குப் பதிலாக முகமது ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்க ஆகியோரை அணிக்கு கொண்டுவந்துள்ளனர்.

இதற்கிடையில், பின்வரும் மூன்று வீரர்கள் ODI அணியில் காத்திருப்பு வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1) குசல் ஜனித் பெரேரா
2) பிரமோத் மதுஷன்
3) ஜெஃப்ரி வாண்டர்சே

#SLvIND #SriLankaCricket #LKA

Previous articleODI தலைவரான அசலங்க..!
Next articleசாமரி அத்தபத்து, பெண்களுக்கான The hundred தொடரில் அறிமுகமாகிறார்.