#SLvIND போட்டியில் ஏன் சுப்பர் ஓவர் இல்லை..!

இலங்கை, இந்தியா முதலாவது ஒருநாள் போட்டி சமனில் முடிந்தபோதும் ஏன் Super Over இல்லை..?
பரபரப்பாக சென்ற போட்டி சமனில் முடிந்த பிறகு பெரும்பாலான ரசிகர்கள் சமன் ஆனால் என்ன எப்படியும் இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றிவிடும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இலங்கை-இந்தியா அணிகள் போட்டியில் சூப்பர் ஓவர்முறை பின்பற்றப்படவில்லை.

தெரியாதவர்களுக்கு, ஐசிசி விளையாட்டு நிபந்தனைகளின் படி ஒவ்வொரு டி20 போட்டியும் சமனில் முடிவடையும் போது சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்படுகிறது. ஆனால் அதேமுறை ஒருநாள் போட்டிகளில் பின்பற்றப்படுகிறதா என்றால் இல்லை.

ஒருநாள் போட்டியை பொறுத்தவரையில் உலகக்கோப்பை முதலிய பெரிய தொடர்கள் மற்றும் இரண்டிற்கு மேற்பட்ட கலந்துகொள்ளும் தொடர்களில் பின்பற்றப்படுகிறது.

அதையும் தான்டி இரண்டு அணிகள் மோதிக்கொள்ளும் ஒருநாள் தொடரில் சூப்பர் ஓவர் முறை வைத்துக்கொள்ள வேண்டுமானால், இரண்டு அணிகளின் வாரியமும் சேர்ந்து அந்த முடிவை எடுத்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

இன்றுவரை, மூன்று ஒருநாள் போட்டிகள் மட்டுமே சூப்பர் ஓவரைக் கண்டுள்ளன. அதில் எல்லோருக்கும் பரிட்சயமான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டி உதாரணம். அந்த ஆட்டத்தில் தான் முதல்முறையாக சூப்பர் ஓவர் முறை ஒரு நாள் போட்டிகளில் நடத்தப்பட்டது.

கடைசியாக நடந்த ஒருநாள் போட்டி சூப்பர் ஓவர் என்றால், 2023 ஒருநாள் உலகக்கோப்பை Qualifier போட்டியில் West Indies மற்றும் Netherland அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதில் West Indiesஸை வீழ்த்தி Netherland வெற்றிபெற்றது.

உலகக்கோப்பை அல்லாமல் நடைபெற்ற ODI சூப்பர் ஓவர்..
உலகக்கோப்பை முதலிய பெரிய தொடர்கள் அல்லாமல் நடந்த ஒருநாள் போட்டியிலும் சூப்பர் ஓவர் முறை நடத்தப்பட்டுள்ளது. 2020 Pakistan – Zimbabwe இரண்டு அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி சமனில் முடிந்த போது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு, அதில் Zimbabwe அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றது. (Zimbabweக்கு பட்டாணிய அவமானப்படுத்துறதே வேலையாப்போச்சு)

ஒவ்வொரு தொடருக்கு ஏற்ப விதிமுறைகள் மாறுபடுகின்றன, ஒருவேளை இரண்டு வாரியங்கள் முன்கூட்டியே சம்மதித்திருந்தால் Super Over இருந்திருக்கும்.

இந்தியா இலங்கை போட்டி சமனில் முடிந்தபோதும் ஏன் சூப்பர் ஓவர் இல்லை என குழப்பமடைந்த ரசிகர்கள், பாகிஸ்தான் – ஜிம்பாப்வே போட்டியை உதாரணமாக காட்டி சூப்பர் ஓவர் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

நன்றி: புதியதலைமுறை