Sri Lanka cricket தடையை நீக்கியது சர்வதேச கிரிக்கெட் பேரவை…!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உறுப்புரிமை இடைநிறுத்தலை முடிவுக்கு கொண்டு அங்கத்துவத்தை மீள இணைத்துக்கொள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.ஹரின் பெர்னாண்டோ டுவிட்டர் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை சர்வதேச கிரிக்கட் பேரவை இதுவரை வெளியிடவில்லை எனவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

Previous articleகாவலாளி முதல் கதாநாயகன் வரையான ஷமர் ஜோசப் இன்பிரேஷன் ஸ்டோரி ❤️
Next articleதோல்விக்கு நாங்கள் பயப்படவில்லை என்பதுதான் எங்களின் அணுகுமுறை -ஸ்டோக்ஸ் மிரட்டல் …!