Super 4 போட்டிகளுக்கான அட்டவணை விவரம்- இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்னுமொரு போட்டி…!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் 15வது ஆசிய கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் நான்காவதாக super 4 சுற்றுக்கு தகுதி பெற்றது .
ஏற்கனவே ஆப்கானிஸ்தான், இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் தகுதி பெற்றிருந்த நிலையில் இன்று நான்காவது அணியாக பாகிஸ்தான் தனது இடத்தை உறுதிப்படுத்தியது.
இதன் மூலமாக வார இறுதி நாட்களில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சனிக்கிழமை ஒரு போட்டியிலும், இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியிலும் குழுநிலை ஆட்டங்களை போன்று ஒரு தடவை மோதவுள்ளமை சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி வரைக்கும் இந்த போட்டிகள் இருக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.
எமது YouTube தளத்துக்கு செல்ல ?