அடுத்துவரவிருக்கும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 க்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, சிறந்த தேசிய மற்றும் முதல் தர கிரிக்கெட் வீரர்களின் பங்கேற்புடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு புதிய டி 20 லீக்கை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
‘SLC invitation T20 League’ என்று அழைக்கப்படும் இந்தப் போட்டி, 2021 ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஆரம்பமாகி, பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது, போட்டி தொடரில் இந்த நான்கு அணிகள் பங்கேற்கும், ‘Blues,’ ‘Reds, ” Greens’, மற்றும் ‘Greys’ என நான்கு அணிகள் போட்டியிடவுள்ளன.
ஒவ்வொரு அணியும் லீக்கின் ஆரம்ப சுற்றில் 06 ஆட்டங்களை விளையாடும், அதே நேரத்தில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் 2 அணிகள் 2021 ஆகஸ்ட் 24 அன்று நடைபெறும் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.
இந்த போட்டி சர்வதேச தரத்திற்கு ஏற்ப விளையாடப்படும், மேலும் போட்டிகள் அனைத்தும் ‘Double Header’ அடிப்படையில் ஒவ்வொரு அணியும் எதிரணியுடன் 2 போட்டிகள் எனும் அடிப்படையில் விளையாடப்படும்,தொடரின் ஒவ்வொரு முதல் ஆட்டமும் பிற்பகல் 02.30 க்கும் அடுத்த போட்டி 07.00 மணிக்கும் தொடங்கும்.
இந்த போட்டி முக்கிய சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னதாக, வீரர்களுக்கு மிகவும் தேவையான போட்டி பயிற்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லே டி சில்வா தெரிவித்தார்.
ஒரு அணியும் 15 பேர் கொண்ட குழுவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் முகமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்த புதிய டுவென்டி டுவென்டி தொடர் ஏதுவாக அமையும் என்று நம்பலாம்.
LPL தொடரும் பிற்போடப்பட்ட நிலையில் உலகக் கிண்ணத் தொடருக்கான வீரர்களை தெரிவு செய்வதற்கு இந்த புதிய தொடர் ஏதுவாக அமையும் என நம்பப்படுகிறது.