T20 உலகக்கிண்ணம் பற்றிய  முழுமையான தொகுப்பு- சாதனைகளுடன் புள்ளிவிபரங்கள்..!

T20 உலகக்கிண்ணம் பற்றிய  முழுமையான தொகுப்பு- சாதனைகளுடன் புள்ளிவிபரங்கள்..!

எத்தனையோ தொடர்கள் பிரசித்தி பெற்று இருந்தாலும் உலகக்கிண்ணம் என்று வந்தால் அதன் மவுசே தனி. தொடர் என்றால் 2 அணிகள் மோதும். முக்கோண தொடர் என்றால் 3 அணிகள் மோதும். உலகக்கிண்ணம் 16 அணிகள் மோதுவதால் மேலும் சுவாரஷ்யமாக உள்ளது.. ஒவ்வொரு அணி ரசிகர்களும் தங்கள் அணியை ரசிப்பதில் போட்டிபோட்டுக்கொண்டு ஆதரவளிப்பர்.

முதல் T20 உலகக்கிண்ணம் 2007 இல் தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்றது. அந்த வருடம் இந்தியா எம்எஸ் தோனியின் தலைமையில் சம்பியன் மகுடம் சூடியது.. இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்து கன்னிt20 கோப்பையை வென்றது. இந்த போட்டி இறுதி ஓவரில் ஜோஹிந்தர் சர்மா வீசிய அபாரமான பந்துவீச்சு பிரதிகளால் இந்தியா பக்கம் வசமானது கிண்ணம். இதன் பின்னரே தோனியின் வளர்ச்சி உச்சத்தை தொட்டது..

2009 ஆம் ஆண்டு 2 வது உலகக்கிண்ண தொடர் இங்கிலாந்தில் இடம்பெற்றது. இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மோதின. அப்ரிடியின் சகலதுறை ஆட்டத்தால் பாக்கிஸ்தான் வசமானது வெற்றிக்கோப்பை..அமீர் போன்ற திறமையான பந்து வீச்சாளர்கள் இந்த தொடரிலே இனம் காணப்பட்டனர். இந்த தொடர் முழுவதும் பாக்கிஸ்தான் முழு ஆதிக்கம் செலுத்தியிருக்கும்..

2010இல் மேற்கிந்திய தீவில் 3 வது உலகக்கிண்ண தொடர் ஆரம்பமானது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து பற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.. இவ்விரண்டு அணிகள் மோதும் போட்டிகளுக்கு விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. கீஸ்வெட்டர் மற்றும் கெவின் பீட்டர்சனின் அதிரடி துடுப்பாட்டத்தால் இங்கிலாந்து கன்னி உலகக்கோப்பையை சுவைத்தது. இந்த தொடர் முழுவதும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெவின் பீட்டர்சன் தொடர்நாயகனாக செயற்பட்டார்.

2012 இல் 4 வது உலக கிண்ண தொடர் இலங்கையில் இடம்பெற்றது. இறுதிப் போட்டிற்கு இலங்கை மற்றும் மே. இந்திய தீவுகள் தகுதி பெற்றன.கடைசிவரை யிலும் போட்டி சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் சென்றது. நரேனின் மாயாஜால பந்துவீச்சாலும் சாமுவேல்ஸின் துடுபாட்டத்தாலும் மே. இந்திய அணி வசமானது உலகக்கிண்ணம். இலங்கையின் அணியின் போராட்டம் இந்த தொடரிலும் கனவாகவே போனது..

2014 இல் 5வது தொடர் வங்கள தேசத்தில் இடம்பெற்றது. இறுதிப்போட்டி இலங்கை மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சசை நடாத்தின.. மலிங்க & குலசேகரவின் துல்லிய பந்துவீச்சாலும் குமார் சங்கக்காரவின் நிதானம் கலந்த துடுப்பாட்டத்தாலும் அதுவரை அரையிறுதி, இறுதிப்போட்டி வரை போராடி தோல்வியை தழுவிய இலங்கை அணி கிண்ணம் வென்றது. இந்த தொடர் முழுவதும் இலங்கை வீரர்கள் அணியாக செயற்பட்டனர்.

2016இல் 6 வது உலகக்கிண்ண தொடர் இந்தியாவில் இடம்பெற்றது. வெற்றி பெற முடியுமா என்று நினைத்த பலம் பொருந்திய இந்திய அணியை துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மே.இந்திய தீவு அணி. இறுதிபோட்டிக்கு இங்கிலாந்து மற்றும் மே. இந்திய அணிகள் தகுதி பெற்றன.இதுவரை நடைபெற்ற t20 தொடர்களில் இந்த போட்டியே எல்லா கால போட்டிகளிலும் சிறப்பான போட்டியாகும். கைநழுவிப்போன போட்டியை கார்லோஸ் ப்ரத்வெயிட் தனது அதிரடி ஆட்டம் மூலம் மே. இந்திய அணிக்கு 2 வது கிண்ணம் வாங்கி கொடுத்திருப்பார். 1 ஓவரில் 19 தேவைப்பட்ட வேளை முதல் 4 பந்துகளையும் ஆறாக மாற்றி வானவேடிக்கை நிகழ்த்தியிருப்பார். இந்த போட்டியை கிரிக்கட் ரசிகர்கள் எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.

7 வது தொடர் 2020 இல் அவுஸ்திரேலியாவில் நடைபெற இருந்த வேளை கொரோன அச்சம் காரணமாக இந்தியாவிற்கு மாற்றப்பட்டது. இந்தியாவிலும் கொரோனா தீவிரமாக காணப்பட்டதால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமான் அனுமதியுடன் அந்த நாடுகளில் இந்த ஆண்டு நடைபெறுகிறது. எதிர்வரும் 17 ம் திகதிகளில் உலகிண்ணம் தொடங்கிறது. தகுதிக்காண் போட்டிகள் ஒக்டோபர் 17-22 வரையிலும் ஒக்டோபர் 23 தொடக்கம் நவம்பர் 8 வரை சூப்பர் 12 லீக் போட்டிகள் இடம்பெறும். இறுதிப்போட்டி 14 இல் இடம்பெறும்.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில்..

அதிகூடிய ஓட்டங்களைபெற்ற நபர் *மஹேல ஜெயவர்தன*?? (1016 ஓட்டங்கள் )

அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்தியவர் *ஷஹீத் அப்ரிடி*?? (39 விக்கெட்டுக்க்ள் )

சிறந்த பந்துவீச்சுப்பிரதி *ரங்கன ஹேரத்*?? (3ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் )

அதிக கிண்ணம் வென்ற அணி *மேற்கிந்திய தீவுகள்* ?? (2)

அதிக தடவை இறுதிப்போட்டிற்க்கு தெரிவான அணி *இலங்கை*?? (3)

ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெற்ற அணி *இலங்கை* ?? 260/6 எதிர் கென்யா ??

ஒருபோட்டியில் குறைந்த ஓட்டங்களை பெற்ற அணி *நெதர்லாந்து* ?? 39 ஓட்டங்கள் எதிர் இலங்கை ??

அதிக ஆட்டமிழப்புகளை விக்கெட் காப்பாளராக நிகழ்த்தியவர் *எம் எஸ் தோனி*??(32ஆட்டமிழப்புக்கள்)

அதிக பிடியெடுப்புகள் *ஏ பி டீ வில்லியர்ஸ்* ?? (23 பிடியெடுப்புகள் )

சிறந்த இணைப்பாட்டம் *கைல் & ஸ்மித்* ?? 145 ஓட்டங்கள் எதிர் தென்னாபிரிக்கா ??

அதிக போட்டிகளை விளையாடியவர் *திலகரட்னா டில்ஷான்* ??(35 போட்டிகள் )

அதிக போட்டிகள் விளையாடிய தலைவர் *எம் எஸ் தோனி* ??(33 போட்டிகள் )

இந்த சாதனைகள் இவ்வாறிருக்க. ஒவ்வொரு அணியும் இந்த வருடம் கிண்ணம் வெல்வதை தீவிரம் காட்டி வருகிறது. திறமையுடன் நடைபெறும் இடத்தையும் காலநிலையையும் சரியாக கணித்து அதற்கேற்றார் போல் விளையாடும் அணி கோப்பை வெல்லும் என்பதில் ஐயமில்லை.

கிரிக்கட் திருவிழாவில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் அனைத்து அணிகளும் சிறப்பாக செயற்பட்டு இந்த தொடர் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

(றிழ்ஹான் வாஹித் )

Face book பதிவிலிருந்து.