T20 உலக கிண்ணத்துக்கான அதிகாரபூர்வ பாடல் வெளியீடு- கோலி, பொல்லார்ட் பங்கேற்பு…!

T20 உலக கிண்ணத்துக்கான அதிகாரபூர்வ பாடல் வெளியீடு- கோலி, பொல்லார்ட் பங்கேற்பு…!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வியாழக்கிழமை பிற்பகல் ஐசிசி ஆண்கள் டி 20 உலகக் கோப்பை 2021 இன் அதிகாரப்பூர்வ கீதத்தை அறிமுகப்படுத்தியது.

‘லைவ் தி கேம்’ என்ற தலைப்பில் இந்த கீதத்தை பிரபல இந்திய இசை அமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். இந்த அனிமேஷன் திரைப்படத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மேற்கிந்திய தீவுகள் கேப்டன் கீரான் பொல்லார்ட், ஆப்கானிஸ்தான் ஆல்-ரவுண்டர் ரஷித் கான் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோரின் ‘அவதாரங்கள்’ இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, ஐசிசி ஆண்கள் டி 20 உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ கீதம் 3 டி மற்றும் 2 டி இரண்டையும் சேர்த்து புத்தம் புதிய ஒளிபரப்பு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

காணொளியைப் பாருங்கள்.