T20 உலக கிண்ண அனுபவம்- இந்தூசன்..!

WT20 அனுபவம் part

2009ஐப்போல ஒரு மோசமான வருசம் வாழ்க்கையில வந்ததே கிடையாது! எதிர்காலம் தொடர்பா எடுத்து வைச்ச எல்லா stepலையுமே அடுத்தடுத்து அடியா விழுந்திச்சு. எல்லாரும் என்னைச் சுற்றி பரப்பா இயங்கின நேரம் எனக்கு மட்டும் அடுத்து என்ன எண்டு எதுவுமே தெரியாது! எனக்கு மட்டும் எல்லாமே stuckஆகினமாதிரி இருந்தது! அப்போ நாட்டு நிலமை சுத்தமாவே மோசம்; வெளியே போய் வாறதே திகில் அனுபவம்! ரெண்டு கிழமைக்கு ஒருக்கா வெளிய போய் வருவேன் Morning British Council Library, Evening US aid library, மாசத்தில ஒருக்கா Open University போய் வருவேன்! Mathematics க்கு மட்டும் Day School போவேன்! மற்ற நேரம் போறதில்லை.. அங்கங்க லைட்டா ragging வேற இருக்கும் நமக்கு சும்மாவே வாயில சனி! TVயும் cricketம் கிட்டத்தட்ட முழுநேர job போலத்தான் அப்ப! News Channel எதுவுமே பாக்கிறதில்லை.. Sports மட்டும் தான்! கிட்டத்தட்ட எல்லா விதத்திலையும் எனக்கிருந்த ஒரே distraction cricket மட்டும் தான்

Pakistan attackல Sri Lanka team தப்பிப் பிழைச்சு வந்து! அடுத்து போற major tournament! 2007ஓட ஒப்பிட்டால் Team நிறையவே மாறி இருந்தது! Dilshan மேலே promote பண்ணப்பட்டு தனக்கு delayயான எல்லாத்துக்கும் சேர்த்து fullஆ வெளுத்து வாங்கத் தொடங்கின காலம். எந்த match யார் opponent ரெண்டுமே அப்ப Dilshanக்கு அநாவசியம், லைட்டா அங்க அங்க dilscoop வேற அடிக்கத் தொடங்கியிருந்தாரு! அதைப் பாக்கிறதே தனி feel?

Bowling department செமையான ஒரு formலை இருந்தது! ஆனாலும் இந்த world cup நடக்கும் வரைக்கும் யாருமே நம்பல “Even bowlers can dominate T20”
பல அதிர்ச்சிகளோட தொடங்கின 2009 World Cup ல எனக்கு 1999 World Cup திகில் ஞாபகங்கள் வந்து disturb பண்ணினாலும் ஏதாவது tough குடுப்பாங்கள் எண்ட நம்பிக்கை ஆழமாவும் அதிகமாவும் இருந்தது!
தொடங்கும் போதே Sri Lanka group of deathல எண்டு சொல்லி வெளிய போறத்துக்கும் chance இருக்கும்போது இந்த groupஏ எசகுபிசகா மாறி Australiaவை வெளிய அனுப்பியாச்சு. அடுத்த second roundல பெருசா ஏதும் பிரச்சினையே இருக்கேல்ல Average score (140+) அதுக்கேத்த bowling performance! Battingல Dilshan அதுதான் formula!

கிட்டத்தட்ட Sri Lanka ஒரு paradigm shiftஐ உருவாக்கிச்சு, அதுதான் even in T20s bowling matters எண்டு! மென்டிஸ், முரளி, மாலிங்க எண்டு சும்மா நெருப்பெடுக்க நாங்க second roundலையும் group top!

அதுவும் அந்த Semi finalஅல்ல மற்ற எல்லாரும் struggle பண்ண Dilshan அடிச்ச அடி! இன்னும் மறக்காது! Harsha வேற “Everything Dilshan touches turns into Gold Today, whereas everyone else struggled here“ எண்டதும் நல்ல ஞாபகம்! Mathews குடுத்த performance ?

T20 format தொடங்கி 2 வருசத்துக்குள்ள கிட்டத்தட்ட 2 IPL season விளையாடியிருந்தும் teamல hitters யாருமில்லை Sanga and Mahela கொஞ்சம் வித்தியாசமா விளையாடத் தொடங்கினாங்க அவ்வளவு தான் we have decoded the Game ??‍♂️

Final Pakistan எண்டதும் கூட எதுவும் பயம் எல்லாம் வரல ஆனாலும் அந்த Dilscoop catchல போனதும், Afridi அடிச்சதும் கொஞ்சம் recover ஆக 4/5 நாள் ஆனது உண்மை! Wasim கூட Sri Lanka 120+ அடிச்ச உடனே தான் panic ஆன உண்மையை சொன்னார்!

அடுத்த ரெண்டு – மூண்டு வருசத்தைப் பற்றி எதுவும் தெரியாததால அப்ப இருந்த பெரிய heart break அதுதான்!

#Indhoosan