T20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் -சாதனைப் புத்தகத்தில் நிஸ்ஸங்க,

இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்க இலங்கை T20 சாதனை புத்தகங்களை நேற்று புதுப்பித்துள்ளார். நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 டீம் போட்டியில் ஆட்டமிழக்காத 55 ரன்கள் எடுத்தார். இலங்கை இருபதுக்கு 20 வரலாற்றில் ஒரு நடப்பு வருடத்தில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற துடுப்பாட்ட வீரராக பதும் நிஸ்ஸங்க மாறினார்.

இந்த வருடத்தில் இதுவரை 16 சர்வதேச T20 போட்டிகளில் 32.73 துடுப்பாட்ட சராசரியுடன் 491 ஓட்டங்களை பதும் நிஸ்ஸங்க பெற்றுள்ளார். இந்த வருடம் பதும் நிஸ்ஸங்க நான்கு T20 அரை சதங்களை அடித்துள்ளார்.

முன்னாள் இலங்கை ஆரம்ப வீரர் திலகரத்ன டில்ஷான் சர்வதேச டி20 அரங்கில் ஒரு காலண்டர் ஆண்டில் இலங்கைக்காக அதிக ரன்களை எடுத்திருந்தார். திலகரத்ன டில்ஷான் 2009 ஆம் ஆண்டு 12 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 42.81 சராசரியுடன் 471 ஓட்டங்கள் எடுத்தார்.

ஒரு காலண்டர் ஆண்டில் அதிக டி20 சர்வதேச ஓட்டங்களைக் குவித்த இலங்கை வீரர்களில் நான்காவது இடத்தை தற்போதைய அணித்தலைவர் தசுன் ஷானக பெற்றுள்ளார். இந்த ஆண்டு இதுவரை 16 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 417 ஓட்டங்களைக் குவித்துள்ளார் .

ஒரு காலண்டர் ஆண்டில் இலங்கைக்காக அதிக டி20 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் ?

பதும் நிஸ்ஸங்க(2022) – 491 ஓட்டங்கள்
திலகரத்ன டில்ஷான் (2009) – 471 ஓட்டங்கள்
குமார் சங்கக்கார (2009) – 434 ஓட்டங்கள்
தசுன் ஷானக (2022) – 417 ஓட்டங்கள்
தினேஷ் சந்திமால் (2016) – 373 ஓட்டங்கள்
மஹேல ஜயவர்தன (2010) – 343 ஓட்டங்கள்

எமது YouTube தளத்துக்கு செல்ல ?