T20 கிரிக்கெட் அகராதியில் மிகச் சிறந்த தலைவர்கள்- கோலிக்கு மூன்றாவது இடம் ..!

T20 கிரிக்கெட் அகராதியில் மிகச் சிறந்த தலைவர்கள்- கோலிக்கு மூன்றாவது இடம் ..!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி T20 போட்டிகளின் தலைமைத்துவத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதன் அடிப்படையில் T20 போட்டிகளில் மிகச் சிறந்த தலைவர்கள் யார் என தேடிப் பார்த்தோம், அதன் அடிப்படையில் உலகின் மிகச்சிறந்த டுவென்டி20 போட்டிகளுக்கான தலைவராக ஆப்கான் அணயினுடைய தலைவர் ஆஸ்கர் ஆப்கான் காணப்படுகிறார்.

52 போட்டிகளில் ஆப்கானிஸ்தானுக்கு தலைவராக கடமையாற்றி 42 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து பாகிஸ்தான் அணித்தலைவர் சப்ராஸ் அகமது இரண்டாவது இடத்தில் காணப்படுகி்ன்றார், இவர் 37 போட்டிகளில் 29 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

 

இவருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் விராட் கோலி காணப்படுகிறார். மொத்தமாக 45 போட்டிகளில் தலைவராக கடமையாற்றிய 27 வெற்றிகளை பெற்று கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகச்சிறந்த T20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தலைவர்கள் வரிசையில் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்துவரவுள்ள உலக்கிண்ண T20 தொடருக்கு பின்னர் கோலி T20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.