டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக 3 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கே.எல் ராகுல் படைத்துள்ளார்.
15வது ஐபிஎல் தொடரில் 37வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெற்று வருகிறது.
இந்த போட்டியில் லக்னோ அணியின் தலைவர் லோகேஷ் ராகுல் சதம் அடித்து ஒரு புதிய சாதனை படைத்தார்.
ஐபிஎல் வரலாற்றில் மட்டுமல்லாது கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு குறித்த அணிக்கு எதிராக மூன்று சதங்களை விளாசியவர் எனும் புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் .
முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 168 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது, இந்த ஐபிஎல் தொடரில் ராகுலின் இரண்டாவது சதம் இது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
ஐந்து தடவைகள் ஐபிஎல் சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக லோகேஷ் ராகுல் இறுதியாக விளையாடிய 9 போட்டிகளில் 3 சதம் ,4 அரைச்சதங்களை விளாசியுள்ளார் .
அது மாத்திரமல்லாது குறித்து 9 போட்டிகளில் ஐந்து தடவைகள் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் ராகுலை ஆட்டமிழப்பு செய்ய முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .
என்றும் ஆட்டமிழக்காது 103 ஓட்டங்களை குவித்தமை குறிப்பிடத்தக்கது.
KL Rahul and his love for Mumbai Indians ? pic.twitter.com/V5r9XqdVut
— Big Cric Fan (@cric_big_fan) April 24, 2022
2019 -வான்கடேவில் 100*(64)
2022-பிரபோர்னில் 103*(60)
2022-வான்கடேவில் 103*(62) -இன்று 24.04.2022