T20 தரவரிசையில் முதலிடத்தை தவறவிட்ட பாபர் அசாம் -புதிய தரவரிசை வெளியானது…!

பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஸ்வான், பாபர் அசாம் மற்றும் மிஸ்பா-உல்-ஹக் ஆகியோருக்குப் பிறகு ICC ஆடவர் T20I பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 ஆன மூன்றாவது பாகிஸ்தான் வீரர் எனும் பெருமை பெற்றுள்ளார்.

புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட வாராந்த புதுப்பிப்புக்குப் பிறகு, ஐசிசி ஆடவர் டி20 வீரர்கள் தரவரிசையில் பாபர் ஆசாமை முந்தி முதலிடத்தை பிடித்துள்ளார்.

துபாயில் நடந்த ஹாங்காங் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை குரூப் A போட்டியில் 57 பந்துகளில் 78 ரன்கள் எடுத்த ரிஸ்வான் ஆட்ட நாயகனாகத் தொடர்ந்து 796 ரேட்டிங் புள்ளிகளில் இருந்தார், அதன்பின்னர் இந்தியாவுக்கு எதிராக 51 பந்தில் 71 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 815 புள்ளிகள் பெற்று முதல் முறையாக முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

மொத்தமாக 1,155 நாட்கள் முதலிடத்தில் இருந்த பாபர் மற்றும் 313 நாட்கள் முதலிடத்தில் இருந்த மிஸ்பா-உல்-ஹக் ஆகியோருக்குப் பிறகு டி20 பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த மூன்றாவது பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் ஆவார்.

இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

செவ்வாய்கிழமை இந்தியாவுக்கு எதிரான ஒரு மறக்கமுடியாத வெற்றியில் அரைசதம் அடித்ததன் பின்னர் இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களான பாத்தும் நிசாங்க மற்றும் குசல் மெண்டிஸ் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

நிஸ்ஸங்க ஒரு இடம் முன்னேறி எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், மெண்டிஸ் 63 இடங்கள் முன்னேறி 41ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். தசுன் ஷனக (11 இடங்கள் முன்னேறி 39 ஆவது) மற்றும் பானுக ராஜபக்ச (31 இடங்கள் முன்னேறி 68 ஆவது) துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முன்னேறியுள்ளனர்,

அதே சமயம் பந்துவீச்சாளர்களில் மஹேஷ் தீக்ஷன ஐந்து இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்திற்கு வந்துள்ளார்.

இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா இலங்கைக்கு எதிரான சூப்பர் ஃபோர் போட்டியில் 72 ஓட்டங்களைப் பெற்று நான்கு இடங்கள் முன்னேறி 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ரவிச்சந்திரன் அஷ்வின் (8 இடங்கள் முன்னேறி 50வது இடம்), அர்ஷ்தீப் சிங் (28 இடங்கள் முன்னேறி 62வது இடம்) ஆகியோரும் முன்னேறியுள்ளனர்.

எமது YouTube தளத்துக்கு செல்ல ?