T20 தரவரிசையில் முதலிடத்தை நெருங்கும் பாபர் அசாம்…!

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை அண்மையில் கைப்பற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம், T20 போட்டிகளிலும் முதலிடத்தை நெருங்குகின்றார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டுள்ள புதிய T20 போட்டிகளுக்கான தரவரிசையில் பாபர் அசாம் 2 ம் இடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் 892 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில் , பாபர் அசாம் அவருக்கு அடுத்த நிலையில் 844 புள்ளிகளுடன் 2 ம் இடத்தில் காணப்படுகின்றார்.

வெகுவிரைவில் இருபதுக்கு இருபது போட்டிகளிலும் பாபர் அசாம் முதலிடம் பிடிக்கும் நாள் நெருங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபாகிஸ்தான் அணி அசத்தல் வெற்றி..!
Next articleT20 தரவரிசையில் இலங்கை வீரர்கள் ஆதிக்கம்…!