T20 தரவரிசை வெளியீடு -முதலிடம் யாருக்கு ?

பாபர் அசாம் ICC டி20 தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துள்ளார், பாகிஸ்தான் கேப்டன் 818 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

டி20ஐ தரவரிசையில் நம்பர் 2 இடத்தைப் பிடித்த சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்கப்பட்டாலும் அது நடைபெறவில்லை.

ஞாயிற்றுக்கிழமை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இறுதி டி 20 போட்டியில் விளையாடாததால் டி 20 ஐ தரவரிசையில் பாபர் ஆசாமை முந்துவதற்கான வாய்ப்பை இழந்தார்.


ஆசிய கோப்பையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாபர் ஆசாம் இடையே ஒரு சுவாரஸ்யமான போராக இருக்கும், ஏனெனில் T20I தரவரிசையில் முதலிடத்திற்கான போராட்டம் நிச்சயமாக காணப்படும்.

இந்தியா ஆகஸ்ட் 28 அன்று துபாயில் தனது தொடக்க ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

ஆண்களுக்கான ICC T20I பேட்டிங் தரவரிசை (ஆகஸ்ட் 10, 2022 நிலவரப்படி)

1. பாபர் ஆசாம் (பாகிஸ்தான்) – 818
2. சூர்யகுமார் யாதவ் (இந்தியா) -805
3. முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) – 794
4. ஐடன் மார்க்ராம் (தென் ஆப்பிரிக்கா) -792
5. டேவிட் மாலன் (இங்கிலாந்து) – 731
6. ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா) – 716
7. பதும் நிஸ்ஸங்க (இலங்கை) – 661
8. டெவோன் கான்வே (நியூசிலாந்து) – 655
9. நிக்கோலஸ் பூரன் (மேற்கிந்திய தீவுகள்) – 644
10. மார்ட்டின் குப்டில் (நியூசிலாந்து) – 638