T20 போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய டெல்லி இளம் அதிரடி வீரர் ..!
இருபதுக்கு இருபது போட்டிகளில் டெல்லியைச் சேர்ந்த வீரர் ஒருவர் இரட்டை சதம் விளாசிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது .
டெல்லி அணிக்காக உள்ளூரில் கிரிக்கெட் விளையாடி வரும் சுபோத் பாட்டி எனும் வீரர் உள்ளூர் போட்டி ஒன்றில் டெல்லி பதினொருவர் அணிக்காக விளையாடி 79 பந்துகளில் 205 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
அந்த அணி மொத்தமாக 20 ஓவர்களில் 256 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, சுபோத் பாட்டியின் துடுப்பாட்ட பங்களிப்பாக 205 ஓட்டங்கள் சிறப்பம்சமாக அமைந்த்து.
79 பந்துகளில் சுபோத் பாட்டி 17 சிக்சர்கள் உள்ளடங்கலாக 205 ஓட்டங்களைக் குவித்தார் .
ஒருநாள் போட்டிகளில் 200 ஓட்டங்களே அபூர்வமான சாதனையாக பார்க்கப்படுகிறது, இப்படியிருக்க 20 ஓவர்கள் கொண்ட போட்டியில் இரட்டை சதம் விளாசிய டெல்லியைச் சேர்ந்த வீரர் பற்றி சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் சுபோத் பாட்டி என்று அழைக்கப்படும் இந்த இளம் வீரர் அடிப்படையான 20 லட்சத்துக்கு ஏலத்துக்கு வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயினும் எந்த ஒரு அணியும் அவரை ஏலத்தில் பெற்றுக்கொள்ளாத நிலையில் இப்போது இந்த இரட்டைச் சதத்தின் மூலமாக சுப்போட் பாட்டி மிகப் பெரும் அளவில் சமூக வலைத்தளங்களில் பேசப்படுகின்றார்.
இந்தியாவிலிருந்து அதுவும் டெல்லி மாநிலத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் நோக்கி ஒரு இளம் புயல் படையெடுக்கிறது.