T20 போட்டிகளில் தொடரும் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்தியா, இலங்கையை என்ன செய்யபோகிறது ?
இலங்கைக்கான கிரிக்கெட் சுறலறுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று ஆர் பிரேமதாச மைதானத்தில் ஆரம்பிக்கிறது.
இந்த போட்டி தொடரில் இந்திய அணி எவ்வாறு விளையாடப் போகிறது, இலங்கையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது எனும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.
ஏனென்றால் T20 உலகக் கிண்ணத் தொடர் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆரம்பமாக இருக்கும் நிலையி,ல் இந்த தொடர் இரண்டு அணிகளுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய அணி உலக கிண்ண போட்டிகளுக்கு முன்னர் விளையாடும் 3 ஆட்டங்கள் இந்த இலங்கையுடனான ஆட்டங்கள் மட்டுமே ,அதற்கு பின்னர் இந்திய அணிக்கு சர்வதேச ஆட்டங்கள் எதுவும் ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு அணிகளுக்கும் இடையில் இதுவரைக்கும் இடம்பெற்றிருக்கின்ற 19 ஆட்டங்களில் இந்திய அணி 13 ஆட்டங்களை வென்றிருக்கிறது, இறுதியாக இரு அணிகளுக்குமான 10 T20 போட்டிகளில் 9 ஆட்டங்களில் இந்திய அணி வென்றிருக்கிறது.
இதைவிடவும் இந்திய அணி இறுதியாக விளையாடியிருக்கிற ஒட்டுமொத்தமான 8 தொடர்களையும் இந்திய அணி தோற்காமல் (7 Win) வெற்றியின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான தொடரில் ஏதாவது அதிர்ச்சி வைத்தியங்கள் அரங்கேற்றப்படும் எனும் எதிர்பார்ப்பு இலங்கை ரசிகர்களுக்கு இருக்கிறது.