T20 உலகக்கிண்ணம் இந்தியாவிற்கு – சாகித் அஃப்ரிடி கருத்து..!
இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று நிறைவுக்கு வந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றுக்கொண்டது, இதன் மூலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சயித் அஃப்ரிடி இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள T20 உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணி கிண்ணத்தை வெல்ல தகுதியான அணி எனும் கருத்தை பகிர்ந்திருக்கிறார்.
இரண்டாவது போட்டியில் 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் தொடரை 2-0 என வெற்றி கொண்டுள்ளது.