அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
வேகப் பந்துவீச்சாளர்களான கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வூட் ஆகியோர் தங்களின் காயங்களில் இருந்து மீண்டு, ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை மற்றும் செப்டம்பரில் பாகிஸ்தான் T20 சுற்றுப்பயணத்திற்கான இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ளனர்.
இரண்டு வீரர்களும் கடைசியாக மார்ச் மாதம் மேற்கிந்திய தீவுகளில் நடந்த டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் போது இங்கிலாந்துக்காக விளையாடினர்.
இதேநேரம் வழமையான அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் அணியில் இணைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விடயத்தை நாங்கள் நேற்றைய தினமே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
காயம் காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சரும் இந்த அணியில் இடம்பெறவில்லை.
இங்கிலாந்து ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை அணி: (15 வீரர்கள் மற்றும் மூன்று பயண இருப்புக்கள்)
ஜோஸ் பட்லர் (தலைவர்)
மொயின் அலி
ஜொனாதன் பேர்ஸ்டோ
ஹாரி புரூக்
சாம் கர்ரன்
கிறிஸ் ஜோர்டான்
லியாம் லிவிங்ஸ்டோன்
டேவிட் மாலன்
அடில் ரஷித்
பில் சால்ட்
பென் ஸ்டோக்ஸ்
ரீஸ் டாப்லி
டேவிட் வில்லி
கிறிஸ் வோக்ஸ்
மார்க் வூட்
பயண இருப்புக்கள் (மேலதிக வீரர்கள்)
லியாம் டாசன்
ரிச்சர்ட் க்ளீசன்
டைமல் மில்ஸ்
எமது YouTube தளத்துக்கு செல்ல ?