இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் ஐசிசி ஆடவர் டி20 வீரர்கள் தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 44 பந்துகளில் 76 ரன்கள் குவித்த பிறகு, சூர்யகுமார் யாதவ் மூன்று இடங்கள் முன்னேறி 2 வது இடத்தைப் பிடித்துள்ளார், இது ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணிக்கு 2-1 முன்னிலை அளித்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான பெரும்பாலான காலகட்டங்களில் முதலிடத்தில் இருந்த ஷம்சி, இங்கிலாந்துக்கு எதிரான தென் ஆபிரிக்காவின் 2-1 என்ற தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, 728 தரவரிசைப் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் 792 ரேட்டிங் புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளிலும் அரைசதம் விளாசிய தென்னாப்பிரிக்க வீரர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 16 இடங்கள் முன்னேறி 15வது இடத்தையும், மேற்கிந்திய தீவுகள் வீரர் பிராண்டன் கிங் (29 இடங்கள் முன்னேறி 27வது இடத்தையும்), இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவ் (13 இடங்கள் முன்னேறி 31வது இடத்தையும் பிடித்துள்ளனர்) மற்றும் தென்னாப்பிரிக்காவின் ரிலீ ரோஸ்ஸோவும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
லிட்டன் தாஸ், ஹென்ரிச் கிளாசென் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரும் இந்தப் T20 பட்டியலில் முன்னேறியுள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளின் சுழற்பந்து வீச்சாளர் அக்கேல் ஹொசைன் (3 இடங்கள் முன்னேறி 6வது இடத்திற்கு), இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்டான் (ஒரு இடம் முன்னேறி 16வது இடத்துக்கு), நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் மிட்செல் சான்ட்னர் (3 இடங்கள் முன்னேறி 17வது இடம் பிடித்துள்ளனர். மற்றும் இஷ் சோதி (இரண்டு இடங்கள் முன்னேறி 19வது இடம்) ஆகியோர் பந்துவீச்சாளர்களிடையே குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் ஒருநாள் மற்றும் டுவென்டி 20 போட்டிகளில் முதலிடத்திலும் டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது இடத்திலும் காணப்படும் பாபர் அசாம் விரைவில் அனைத்து வகையான போட்டிகளிலும் ஒரே நேரத்தில் தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் .
இந்த நிலையில் சூரியகுமாரின் இந்த அசுர வளர்ச்சி பாபர் அசாமின் கனவை தாமதப்படுத்தும் போலிருக்கிறது.