T20 போட்டிகளில் புதிய உலக சாதனை படைத்த ரோஹித் சர்மா..!

டி20 போட்டிகளில் அதிக போட்டிகளில் விளையாடிய ஆண் வீரராக ரோஹித் சர்மா இருந்து வந்தார். இந்திய கேப்டன் சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் சோயப் மாலிக்கை முந்தி இந்த சாதனையை தனதாக்கினார்.

இருப்பினும், ரோஹித் இப்போது ஒரு படி மேலே சென்று, ஒட்டுமொத்தமாகவே அதிக டி20 விளையாடிய கிரிக்கெட் வீரராக உலக சாதனையை தனதாக்கினார்,

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ரோஹித் சர்மா இந்த சாதனையை படைத்தார்.

முன்னதாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எலிஸ் பெர்ரி 126 டி20 போட்டிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். அவரது சாதனையை ரோஹித் சர்மா இன்று முறியடித்துள்ளார்.

அதிக டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித், இந்த வடிவத்தில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அவர் இதுவரை 3368 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி 98 ஆட்டங்களில் விளையாடி இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அதிக T20 போட்டிகளில் விளையாடியோர் ?

127 – ரோஹித் சர்மா*
126 – எல்லிஸ் பெர்ரி
126 – சுசி பேட்ஸ்
124 – சோயப் மாலிக்
124 – டீன்ட்ரா டோட்டின்
124 – ஹர்மன்பிரீத் கவுர்
124 – டேனி வியாட்

#ENGvIND