T20 Worldcup- நாளை புறப்படுகிறது இலங்கை..!

2024 T20 உலகக் கோப்பைக்காக வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி நாளை பிற்பகல்  புறப்பட உள்ளது.

கொழும்பு மைட்லண்ட் பிளேஸில் உள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற சமய வழிபாடுகளின் பின்னர் அவர்கள் அமெரிக்கா செல்லவுள்ளனர்.

இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியுடன் தேர்வுக்குழு தலைவர் உபுல் தரங்காவும் இணைந்து கொள்ள உள்ளார்.

இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக இருக்கும் மஹேல ஜயவர்தன அணியில் இணைவாரா இல்லையா என்பது குறித்து இதுவரை வெளியிடப்படவில்லை.