T20 Worldcup- பாண்டியாவை களற்றிவிட திட்டம் போடும் BCCI -புதிய திட்டம்..!

ஹர்திக் பாண்டியாவை இந்திய டி20 அணியில் இருந்து நீக்கலாமா என தேர்வுக் குழு அஜித் அகர்கர் – இந்திய அணி கேப்டன் ரோஹித்மா சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டு இருப்பதாக அறியவருகின்றது.

ஏற்கனவே நான்கு போட்டிகள் நடந்த ஆறு போட்டிகளில் அவர்களில் மட்டுமே பந்து வீசி இருக்கிறார். இதுவே ஒரு சிக்கலாக உள்ளது. ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம் பெற்றால் அனைத்து போட்டிகளிலும் நான்கு ஓவர்களும் வீசும் அளவுக்கு திறன் பெற வேண்டும்.

ஆனால், பாண்டி காலில் உள்ள வலியின் காரணமாக இரண்டு போட்டிகளில் பந்து வீசவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை நான்கு போட்டிகளில் பந்து வீசி உள்ள பாண்டியா ஒருவருக்கு சராசரியாக 12 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். 11 ஓவர்கள் பந்து வீசி மூன்று விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

மேலும், பேட்டிங்கிலும் பாண்டியா சரியாக செயல்படவில்லை. ஆறு போட்டிகளில் 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் இரண்டு முறை சேஸிங்கில் பந்துகளை வீணடித்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அணியின் வெற்றி வாய்ப்பு கெடுத்துள்ளார்.

இந்த காரணங்களால் ஹர்திக் பாண்டியாவை 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு அழைத்து செல்ல வேண்டுமா என்ற விவாதத்தில் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்காரணமாக அவர் தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளிலும் பந்துவீசுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.