தமிழ்நாடு பிரீமியர் லீக் -ஆதித்யா கணேஷ் அதிரடியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது திருச்சி ..!
தமிழ் நாட்டில் இடம்பெற்று வருகின்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக திருச்சி வொரியேர்ஸ் அணி முன்னேறியது.
முன்னாள் சாம்பியன்கள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் ஆதித்யா கணேஷ் இறுதிவரைக்கும் அதிரடி நிகழ்த்தி அரைச்சதம் அடித்து அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
TNPL வரலாற்றில் இதுவரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிராத திருச்சி அணி முதல் தடவையாக இன்றைய குவாலிபயர் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு தேர்வாகி இருக்கிறது.
154 எனும் இலக்குடன் ஆடிய திருச்சி அணிக்கு ஆதித்யா கணேஷ் மற்றும் நிதிஸ் ராஐகோபால் ஆகிய இடது கை வீரர்களுக்கு இடையிலான 4-வது விக்கெட்டுக்கு 93 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை இவர்களின் வெற்றிக்கு பிரதானமான காரணமாக அமைந்த்து.
ஆதித்யா கணேஷ் (45 பந்துகளில் 66*) & நித்திஷ் ராஜகோபால் (45 பந்துகளில் 55) ரன்கள் சேர்த்தனர்.
இறுதி இரண்டு ஓவர்களில் 12 ஓட்டங்கள் தேவையாக இருக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த சாய் கிஷோர் 19 ஓவரை மிகச் சிறப்பாக பந்துவீசி 5 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இறுதி ஓவரில் திருச்சி அணிக்கு ஆறு ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப் பட்டிருக்கும் சித்தார்்த் மணிமாறன் அற்புதமாக பந்துவீசினார், ஆனாலும் இறுதி இரண்டு பந்துகளில் 3 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் சித்தார்த் மணிமாறன் வீசிய பந்தை ஆதித்யா கணேஷ் சிக்சருக்கு அனுப்பி திருச்சி அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
திருச்சி அணிக்கு வாழ்த்துக்கள்.