TNPL 2025 ஏலம்- டாப் 5 தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் யார்? ஒவ்வொரு அணியிலும் இடம்பிடித்த வீரர்கள்
டி என் பி எல் ஒன்பதாவது சீசனுக்கான ஏலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் பலரும் இடம் பிடித்தார்கள். இதில் அதிகபட்சமாக தமிழக ரஞ்சி அணியில் விளையாடிய முஹமது 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு சேலம் அணியால் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
இதேபோன்று விஜய் சங்கரை சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை 18 லட்சம் ரூபாய்க்கும் முகிலேஷ் 17 லட்சத்தி 60 ஆயிரம் ரூபாய்க்கும், திருச்சி அணியால் சுரேஷ்குமார் 16 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் திருச்சி அணியாளும் ஹரி நிஷாந்த் 12 லட்சத்துக்கு சேலம் அணியாலும் ஏலம் எடுக்கப்பட்டார்கள். இந்த நிலையில், ஒவ்வொரு அணியிலும் உள்ள வீரர்கள் பட்டியலை தற்போது பார்க்கலாம்.
திருச்சி கிராண்ட் சோழர்கள்: சஞ்சய் யாதவ், ஜாபர் ஜமால், ராஜ்குமார் ஆர், வசீம் அகமது, அதிசயராஜ் டேவிட்சன், சுஜய் எஸ், வாஷிங்டன் சண்டே, சரவண குமார், கௌஷிக் ஜே, ஈஸ்வரன் கே, வினோத் எஸ்.பி.
சேலம் ஸ்பார்டன்ஸ்: அபிஷிக் எஸ், சன்னி சந்து, ஹரிஷ் குமார் எஸ், பொய்யாமொழி எம், விவேக் ஆர், பூபதி வைஷ்ண குமார், முகமது எம், ஹரி நிஷாந்த், கவுரி சங்கர், ஈஸ்வர், ராகுல் டி
மதுரை பாந்தர்ஸ் : முருகன் அஷ்வின், குர்ஜப்னீத் சிங், சரவணன் பி, சதுர்வேத் என்எஸ், கணேஷ் எஸ், சரத் குமார், அதீக் உர் ரஹ்மான், தீபேஷ் டி, கௌதம் தாமரை கண்ணன், அனிருத் சீதா ராம், சஞ்சீவ் குமார் வி, ஷியாம் சுந்தர், கார்த்திக் எம்.
நெல்லை ராயல் கிங்ஸ்: சோனு யாதவ், அருண் கார்த்திக், அஜிதேஷ் ஜி, ரித்திக் ஈஸ்வரன், ஹரிஷ் என்எஸ், சச்சின் ரதி, முகமது அட்னான் கான், யுதீஸ்வரன், அஜய் கிருஷ்ணன், அதிஷ் எஸ்ஆர், இம்மானுவேல் செரியன், செல்வகணபதி, ரோஹன் ஜே,
திருப்பூர் தமிழன்ஸ்: சாய் கிஷோர், டி நடராஜன், துஷார் ரஹேஜா, மபோமத் அலி, அமித் சாத்விக், சசிதேவ் யு, பிரதோஷ் ரஞ்சன் பால், பிரணவ் ராகவேந்திரா, அச்யுத் சிவி, சிலம்பரசன் ஆர், கனிபாலன், பிரபஞ்சன்
லைகா கோவை கிங்ஸ் ஷாருக் கான், சாய் சுதர்சன், சித்தார்த் எம், சச்சின் பி, ஜாதவேத் எஸ், ரோஹித் ஆர், அம்ப்ரிஷ் ஆர்எஸ், விஷால் வைத்யா, ஆண்ட்ரே சித்தார்த், குரு ஆர், பிரதீப் விஷால், மாதவ பிரசாத், வித்யூத், ஆதித்யா, ஜிதேந்திர குமார்
திண்டுக்கல் டிராகன்ஸ்: ரவி அஷ்வின், வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், பாபா இந்திரஜித், சிவம் சிங், ஜெயந்த் ஆர்கே, மான் கே பாஃப்னா, பெரியசாமி ஜி, ஹன்னி, விஜு அருள்
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்: அபிஷேக் தன்வார், பி அபராஜித், என் ஜெகதீசன், டிடி லோகேஷ் ராஜ், எம் சிலம்பரசன், மோகித் ஹரிஹரன், தினேஷ் ராஜ், ஸ்வப்னில் சிங், விஜய் சங்கர். ரோஹித் சுதர், ராஜலிங்கம், சுனில் கிருஷ்ணா, பி சச்சின், ஆஷிக், ராஜன், அர்ஜுன் மூர்த்தி