Tokyo Olimpic போட்டிகளில் கனவான் தன்மையுடன் நடந்துகொண்டு தங்கத்தை பகிர்ந்த உயரம் பாய்தல் வீர்ர்கள் -1912 க்கு பின்னர் அதிசய நிகழ்வு.

டோக்கியோவில் இடம்பெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் பல கனவான் தன்மையான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

இதில் மிக முக்கியமான நிகழ்வாக உயரம் பாய்தலில் தங்கப்பதக்கத்தை பகிர்ந்து கொண்ட இரண்டு வீரர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் அதிகம் சிலாகிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வு உண்மையில் Sprit of game என்று அழைக்கப்படும் விளையாட்டின் உண்மையான மகத்துவத்தை மதித்து நடந்தது எனவும் பாராட்டப்படுகிறது.

 

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் பாய்தலின் இறுதி தருணம் அது.

இத்தாலியின் ஜியான்மார்கோ தம்பேரி இறுதிப் போட்டியில் கட்டார் நாட்டின் முடாஸ் எஸ்ஸா பார்ஷிமை எதிர்கொண்டார். முடாஸ் எஸ்ஸா பார்ஷிம கடந்த பிரேசில்- ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் உயரம் பாய்தலில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்.

இத்தாலியின் ஜியான்மார்கோ தம்பேரி , கட்டார் நாட்டின் முடாஸ் பார்ஷிம் இருவரும் 2.37 மீட்டர் தாவி சம நிலையில் இருந்தனர், ஒலிம்பிக் அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் 2.39 M க்கு இன்னும் மூன்று முயற்சிகள் கொடுத்தனர், ஆனால் அவர்களால் 2.37 மீட்டருக்கு மேல் உயரத்தை கடக்க முடியவில்லை.

இருவருக்கும் மேலும் ஒரு முயற்சி கொடுக்கப்பட்டது, ஆனால் காலில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக தம்பேரி கடைசி முயற்சியிலிருந்து விலகினார். பார்ஷிமுக்கு போட்டிக்கு வேறு எதிர் போட்டியாளர் இல்லாத காரணத்தால் அவர் தனியாக தங்கத்தை  வென்றிருக்கலாம்.

ஆனால் அங்கேதான் பார்ஷிம் தன் கனவான் தன்மையை காண்பித்தார்.

 “இறுதி முயற்சியிலிருந்து நானும் விலகினால் தங்கத்தை எங்கள் இருவருக்கும் பகிர முடியுமா” என கட்டாரின் பார்ஷிம் வினவ, அதிகாரிகளும”ஆம், தங்கம் உங்கள் இருவருக்கும் இடையில் பகிரப்படும்” என்று கூறினார்.

உடனடியாக பார்சிம் பின்னர் யோசிக்க ஒன்றுமில்லை Jump Off முயற்சியிலிருந்து தானும் விலகுவதாக அறிவித்தார்.

இதைப் பார்த்த இத்தாலிய போட்டியாளர் தம்பேரி ஓடி வந்து பார்ஷிமை கட்டிப்பிடித்து கண்ணீர் மல்கினார்.

இந்த பெருந்தன்மை விபரிக்க முடியாத விளையாட்டுத் திறனை வெளிப்படுத்துகிறது.

இதனால் 109 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பகிரப்பட்டது, உயரம் பாய்தல் போட்டியாளர்கள் கட்டார் நாட்டைச் சேர்ந்த முடாஸ் பார்ஷிம் மற்றும் இத்தாலியின் கியான்மார்கோ தம்பேரி இருவரும் தங்க வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

Tokyo 2020 High Jump

1912 ம் ஆண்டுக்குப் பின்னர் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் பகிரப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு பிரேசில் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஒரு சில வாரங்களில் இருக்கும் நிலையில் தம்பேரிக்கு தன்னுடைய காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமை உருவானது.

அதனைத் தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக காயத்திலிருந்து தீவிர முயற்சிகளின் பின்னர் மீண்டு இம்முறக ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிறகு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

கட்டார் நாட்டின் பார்ஷிம் இனுடைய கணவன் தன்மையான செயற்பாட்டின் காரணமாக இருவரும் வரலாற்றில் முதல் முறையாக உயரம் பாய்தலில் தங்கத்தை தமதாக்கிக் கொண்ட நிகழ்வும் இடம்பெற்றது.

இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல விதமான வாத பிரதி வாதங்கள் முன்வைக்கப்பட்டு கொண்டிருந்தாலும் விளையாட்டில் உன்னதன்மையை இருவரும் மதித்து நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.