U19 ஆசிய கோப்பை: இந்தியாவை பந்தாடிய பாகிஸ்தான் இளையோர்..!

U19 ஆசிய கோப்பை: இந்தியாவை பந்தாடிய பாகிஸ்தான் இளையோர்..!

அண்டர் 19 அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா அண்டர் 19 அணி, பாகிஸ்தான் அண்டர் 19 அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 40 ரன்களுக்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்னூர் சிங் – ஆராத்யா யாதவ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. இதில் ஹர்னூர் சிங் 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கு வாய்ப்பை தவறவிட, ஆராத்யா யாதவ் அரைசதம் கடந்தார்.

இருப்பினும் 49 ஓவர்களிலேயே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஸிசான் ஸமீர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் முகமது ஷேசாத் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இறுதியில் அசாத் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி, 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.

#Abdh

Previous articleLPL தொடரில் திறமைகளை உலகறியச்செய்த இளம் வீரர்கள்
Next articleபாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கபடுதற்கான காரணம் தெரியுமா ?