U19 உலகக்கோப்பை-இறுதி ஆட்டம்- இந்தியா vs இங்கிலாந்து- சிறுஅலசல்

U19 உலகக்கோப்பை-இறுதி ஆட்டம்- இந்தியா vs இங்கிலாந்து- சிறுஅலசல்

இங்கிலாந்து முதல்சுற்று ஆட்டங்களில் பங்களாதேஷ்-கனடா-UAEயையும், அரையிறுதியில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது.

இந்தியா இறுதிப்போட்டிக்குக் கடந்து வந்த பாதையில் இங்கிலாந்து அணியோடு ஒப்பிடுகையில் முதல்சுற்று போட்டியில் தென்ஆப்பிரிக்கா, அரையிறுதியில் ஆஸ்திரேலியா என பலமான அணிகளைச் சந்தித்து வீழ்த்தி இருக்கிறது.

இரு அணிகளின் பந்துவீச்சை எடுத்துக்கொள்ளும் போது வேகப்பந்து வீச்சில் சரிசமாகவே இருக்கிறார்கள். இந்திய மட்டையாளர்கள் இங்கிலாந்தின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் Joshua Boyden-யைக் கவனித்து ஆடுவது நல்லது. பந்தை தாமதமாய் காற்றில் திருப்புகிறார்.

சுழற்பந்து வீச்சைப் பொறுத்துவரை எடுத்துக்கொண்டால் இந்திய அணியின் கையே ஓங்கி இருக்கிறது. இங்கிலாந்து அணியிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்றாலும் இந்திய மட்டையாளர்கள் சுழற்பந்து வீச்சில் சிறப்பாகவே ஆடுவார்கள் என்பது பலமாய் அமைகிறது. மேலும் இங்கிலாந்து வீரர்கள் சுழற்பந்தில்தான் விக்கெட்டுகளை இத்தொடரில் அதிகம் தந்திருக்கிறார்கள் என்பதும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சும் தரமானதாய் இருப்பது கூடுதல் பலம்.

இரு அணிகளின் மட்டையாளர்களை எடுத்துக்கொண்டால் இதிலும் இந்திய அணியே சற்று முன்னால் இருக்கிறது. இங்கிலாந்தைப் பொறுத்தமட்டில் முதல் ஆறு மட்டையாளர்களுமே சராசரியான பங்களிப்பைத் தந்திருந்தாலும், முதல் மூன்று மட்டையாளர்களின் ஆட்டத்தரமும், பங்களிப்பும் மற்றவர்களைக் காட்டிலும் சற்றதிகம். ஆனால் இந்திய மட்டையாளர்களின் ஆட்டம் முதிர்ச்சியாய் இருக்கிறது.

மட்டையாளர்கள் வரிசையும்-திறனும், வேகப்பந்து-சுழற்பந்து வீச்சாளர்களின் தரமும், அணித்தலைவர் வழிநடத்துதலும் கோப்பைக்கான ஓட்டத்தில் இந்திய அணியை இங்கிலாந்து அணியை விட கொஞ்சம் அதிகமாய் உந்தி தள்ளுகிறது!

மாலை 6.30-ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

Richards