UAE யில் ஆரம்பமாகும் பிரம்மாண்ட T20 லீக் – மும்பை, கொல்கத்தா அணிகளும் போட்டியில், வீர்ர்கள் விபரம்..!

வனிந்து, மொயீன், ரஸ்ஸல் ஆகியோர் ILT20 லீக்கில் மிகவும் மதிப்புமிக்க வீரர்களாக கையொப்பமிட்டவர்கள்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ILT20 டுவென்டி 20 கிரிக்கெட் லீக் தொடரில் பங்குபெறும் மிகவும் மதிப்புமிக்க வீரர்களுக்கு கிட்டத்தட்ட USD 400,000 செலுத்த முன்மொழியப்பட்டதன் மூலம் இந்த போட்டி IPLக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.

இன்று இந்தப் போட்டியில் விளையாடும் அணிகளுக்கு ஒப்பந்தம் செய்யக்கூடிய சிறந்த வெளிநாட்டு வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் மூன்று இலங்கை வீரர்களும் அடங்குவர். அந்த வீரர்கள் வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர மற்றும் பானுக ராஜபக்ச.

மொயீன் அலி, ஆண்ட்ரே ரஸ்ஸல், டேவிட் மாலன், சுனில் நரைன், எவின் லூயிஸ், கொலின் மன்ரோ, ஃபேபியன் ஆலன், சாம் பில்லிங்ஸ், டொம் குர்ரன், அகேல் ஹொசைன், டொம் பான்டன், சந்தீப் லாமிச்சேன், கிறிஸ் லின், ரோவ்மேன் பவல் ஆகியோர் இதில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

6 அணிகள் இந்த வீரர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, ஏலம் இல்லாமல் அணிகளில் சேர கையெழுத்திடும். உலக பணக்காரர்கள் வரிசையில் இருக்கும் IPL மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பிரபல நிறுவனங்களும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இங்கு அணிகளை வாங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

எனினும், இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் சார்பில் எந்த ஒரு வீரரும் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. 18 பேர் கொண்ட அணியை தயார் செய்ய அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது.

12 வீரர்கள் வெளிநாட்டு வீரர்களாகவும், 4 வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் 2 வீரர்கள் அசோசியேட் வீரர்களாகவும் வேண்டும் என விதிமுறை உள்ளது, இந்தப் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் டுபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய 3 மைதானங்களில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மொத்தம் 34 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

லஹிரு குமார, சீகுகே பிரசன்னா, சரித் அசலங்க, கொலின் இங்க்ராம், பால் ஸ்டிர்லிங், கென்னர் லூயிஸ், அலி கான், பிராண்டன் குளோவர், ரவி ராம்பால், ரேமன் ரெய்பர், இசுரு உதான, பிளஸ்ஸிங் முசரபானி, நிரோஷன் டிக்வெல்ல, ஹசரதுல்லாஹ் ஜசாய், ஃபிரடெர் ராஜா, சிகன்ஸ் ராஜா , டான் லாரன்ஸ், டொமினிக் டிரேக்ஸ், ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், டேவிட் வைஸ், கைஸ் அகமது, ரிச்சர்ட் க்ளீசன், ஜேம்ஸ் வின்ஸ், நூர் அகமது, ரஹ்மானுல்லா குர்பாஸ், நவின் உல் ஹக், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், சாகிப் மஹ்மூத், பென்னி டக்கெட், பென்னி டக்கெட், ரூபன் ட்ரம்பெல் ஆகிய வீரர்களும் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளது.