UAE யில் முதல்முறையாக இடம்பெறவுள்ள ILT20 லீக்கில் இணையும் வெளிநாட்டு வீரர்கள்- முழுமையான விபரம்..!

UAE யில் முதல்முறையாக இடம்பெறவுள்ள ILT20 லீக்கில் இணையும் வெளிதாட்டு வீரர்கள்- முழுமையான விபரம்..!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிமுகப்படுத்திய சமீபத்திய லீக் ILT20 லீக் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆறு அணிகள் விளையாடவுள்ள நிலையில், இதுவரை ஒவ்வொரு அணிக்குமான வெளிநாட்டு வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான போட்டிக்கான ஒப்பந்தத்தில் 82 வெளிநாட்டு வீரர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இலங்கை வீரர் வனிது ஹசரங்கவை உள்ளடக்கிய டெசர்ட் வைப்பர்ஸ் அணி தற்போது 12 வெளிநாட்டு வீரர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மற்ற அனைத்து அணிகளும் 14 வெளிநாட்டு வீரர்களை தங்கள் அணிகளில் சேர்த்துள்ளன.

சர்வதேச கிரிக்கெட் லீக்கின் முழு உறுப்பினராக உள்ள நாடுகளைத் தவிர, இத்தாலி, நமீபியா, நெதர்லாந்து, நேபாளம், ஓமன், ஸ்காட்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வீரர்களையும் ஒப்பந்தம் செய்துள்ளமை சிறப்பம்சமாகும். 34 போட்டிகள் கொண்ட இந்த போட்டி துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.

போட்டிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட வெளிநாட்டு வீரர்களில் 9 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளமை தனித்துவம் வாய்ந்தது. அவர்களில் அதிக எண்ணிக்கையிலான இலங்கை வீரர்கள் துபாய் கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியன் பிரீமியர் லீக்கின் டெல்லி கேப்பிடல்ஸுக்கு சொந்தமான இந்த அணியில் தசுன், பானுக, சமீர, இசுரு உதான மற்றும் டிக்வெல்ல ஆகியோர் உள்ளனர்.

இந்த தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு சொந்தமான அபுதாபி நைட்ரைடர்ஸ் அணிக்காக சாரித், லஹிரு மற்றும் சிக்குகே ஆகிய மூன்று வீரர்கள் போட்டியிடுகின்றனர். மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணிக்கு சொந்தமான டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்காக இலங்கை வீரர் வனிது ஹசரங்க விளையாட உள்ளார்.

ILT20 போட்டியில் இலங்கை வீரர்கள் விபரம் ?
வனிது ஹசரங்க
பானுக ராஜபக்ஷ
துஷ்மந்த சமிர
நிரோஷன் திக்வெல்ல
சாரித் அசலங்க
லஹிரு குமார
சேக்குகே பிரசன்ன ,தசுன் ஷானக, இசுரு உதான

அணிகளின் இறுதிக் குழுக்கள் ?