சம்பியன் லீக் கிண்ணத்தை தொடர்ந்து UEFA சூப்பர் கோப்பை வென்று அசத்தியிருக்கிறது செல்சி கால்பந்தாட்ட அணி.
UEFA சூப்பர் கோப்பை என்பது UEFA ஆல் நடத்தப்படும் வருடாந்த சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியாகும், சாம்பியன்ஸ் லீக் ,ஐரோப்பா லீக் ஆகிய குறித்த இரண்டு முக்கிய ஐரோப்பிய கிளப் போட்டிகளில் வென்றவர்கள் இந்தப் போட்டியில் போட்டியிடுவார்கள்.
UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரின் தற்போதைய சாம்பியன்களான செல்சி, 2021 இல் ஐரோப்பா லீக் வெற்றியாளர்களான வில்லாரியலுக்கு எதிராக விளையாடிய இந்த UEFA super cup போட்டியில் செல்சி அபார வெற்றிபெற்றது.
முழுநேரத்தில் போட்டி 1-1 என நிறைவுக்கு வந்தது, பின்னர் பெனால்டி முறையில் செல்சி அணி 6–5 வென்றது.
செல்சி அணியின் பயிற்சியாளராக Tuchel பொறுப்பேற்று எட்டு மாதங்கள் நிறைவதற்கிடையிலேயே ஐரோப்பாவின் மிகப்பெரிய இரண்டு கிண்ணங்கள் வெற்றிகொண்டு அசத்தியிருக்கிறார்.
ஐரோப்பிய சாம்பியன் லீக் போட்டிகள் நடந்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்னும் ஒரு வெற்றிகரமான போட்டியாக கருதப்படும் UEFA Super Cup தொடரிலும் மகுடம் சூடி கொடுத்து உலகின் வெற்றிகரமான பயிற்சியாளர்களுள் ஒருவராக Tuchel தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார்.