US Open 2021 ஒரு பார்வை

US Open 2021 ஒரு பார்வை.. !

US Open 2021 இன் போட்டிகள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் இறுதி போட்டியை நெருங்கிவிட்டது. ஆம் அந்த வகையில் , மகளீர் ஒற்றையர் இறுதி போட்டி நாளை அதிகாலை இலங்கை நேரப்படி 1.30 மணிக்கு போட்டி ஆர்மபாமகவுள்ளது.

E. Raducanu எதிர் L. Fernandez ஆட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட நட்சத்திர வீராங்கனைகள் வெளியேற்றி விட்டு முதல் முறை ஒரு grandslam இறுதி போட்டியில் இருவரும் மோதவுள்ளார்கள்.

L. Fernandez : 6 September 2002 அன்று கனடாவில் பிறந்த இவர் இதுவரை பங்குபற்றி இருந்த grandslam போட்டிகளில் 2020/2021 Australian open இல் முதல் சுற்றுடன் வெளியேறி இருந்தார்.


2020 French open இல் மூன்றாவது சுற்றில் வெளியேறி இருந்தார்
2021 Wimbledon முதல் சுற்றுடன் வெளியேறி இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் தரப்படுத்தல் வரிசையில் 73 ஆவது இடத்தில் இருப்பதும் குறிப்பிடதக்கது. Fernandez Junior Grand S இல் 2019 French open இல் வெற்றி பெற்று இருந்தார், 2019 இல் இடம்பெற்ற Australian open இல் இறுதி போட்டியில் தோல்வி அடைந்து இரண்டாவது இடத்தை பெற்று இருந்தார்.

அதே போலவே E. Raducanu 13 November 2002 இல் கனடாவில் பிறந்த இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்திவருக்கிறார் இவர் இங்கிலாந்து சார்பாகவே போட்டியில் பங்குபற்றியுள்ளர். இவர் இந்த ஆண்டு தான் பங்குகொள்ளும் இரண்டாவது Grand Slam போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளார் அது மட்டுமல்லாது தனது வாழ்நாளில் இந்த ஆண்டு முதல் தடவையாக Grand Slam இல் பங்குபற்றுகிறார் என்பது முக்கியமானதொரு விடயம்.2021 இல் முதல் தடவையாக பங்கு பற்றிய Wimbledon ila 4 ஆவது சுற்றில் வெளியேறி இருந்தார். தற்போது உஸ் Open இல் இறுதி போட்டி வரை முன்னேறியுள்ளார். உலக தரவரிசையில் 150 ஆவது இடத்தில் உள்ளார். ITF பட்டம் ஒன்றை வென்றுள்ளார் அதுவே அவர் அதிகூடிய பெறுபேறாக உள்ளது.

இவர்கள் இருவரும் இதற்கு முன் ஒருமுறை Junior Wimbledon போட்டியில் 2018 ஆம் ஆண்டு இரண்டாவது சுற்றில் ஒருவரை ஒருவர் எதிர்த்து ஆடி இருந்தார்கள் இதில் 6-2, 6-4 எனும் நேர் செட் கணக்கில் Raducanu வெற்றி பெற்று இருந்தார் தற்போது மீண்டும் இருவரும் us open இறுதி போட்டியில் மோதவுள்ளர்கள்…..

ஆடவர் பிரிவில்
N. Djokovic vs D. Medvedev….
நாளை மறுநாள் காலை

#சந்துரு வரதராசன்