எதிர்வரும் 18ஆம் திகதி இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் உலக கிரிக்கெட் ரசிகர்களால் உற்று நோக்கப்படும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இடம்பெறவிருக்கிறது.
இதற்கான இந்திய அணி ஏற்கனவே பெயரிடப்பட்டிருந்த நிலையில் ,இன்று நியூசிலாந்து அணியின் இறுதி 15 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து பங்கேற்று வந்த நிலையில், அதற்கு பின்னர் அவர்கள் இறுதி அணி விபரத்தை இன்று அறிவித்திருக்கிறார்கள்.
இங்கிலாந்துடனான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாதுபோன கேன் வில்லியம்சன் அணிக்கு கொண்டுவரப்பட்டமை நியூசிலாந்து ரசிகர்களுக்கு திருப்தியை கொடுத்திருக்கிறது.
NZ அணி விபரம்
Kane Williamson (C), Tom Blundell, Trent Boult, Devon Conway, Colin de Grandhomme, Matt Henry, Kyle Jamieson, Tom Latham, Henry Nicholls, Ajaz Patel, Tim Southee, Ross Taylor, Neil Wagner BJ Watling and Will Young.