WTC இறுதி போட்டியில் வென்று Champion ஆனது New Zealand
WTC Final இல் இந்திய அணியை வீழ்த்தி முதலாவது Test Championship கிண்ணத்தை வென்றுள்ளது New Zealand.
மழையால் பாதிக்கப்பட்டு 6 ஆம் நாள் வரை இடம்பெற்ற போட்டியில் 8 Wicket களால் New Zealand வெற்றியீட்டியுள்ளது.
இந்த வெற்றி மூலமாக எட்டாக்கனியாக இருந்த ICC கிண்ணம் ஒன்றை நியூசிலாந்து அணி வில்லியம்சன் தலைமையில் வெற்றிகொண்டது.
2015, 2019 ஆகிய இரு உலக கிண்ண தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து கிண்ணத்தை கைப்பற்ற முடியவில்லை ஆயினும் இப்போது Test championship மகுடத்தை வென்று சாதனை படைத்தமை சிறப்பம்சமாகும்.
இதே நேரம் விராட் கோலியால் ICC வெற்றி கிண்ணம் ஒன்றை கைப்பற்ற முடியாத சோகம் தொடர்கிறது.
கடந்த 8 ஆண்டுகளில் ஆடவர் ,மகளிர் பிரிவுகளில் ICC இறுதிப்போட்டிகளில் 7 த்டவை இறுதி போட்டிகளில் இந்திய அணி தோற்று கிண்ணத்தை கோட்டை விட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கது.
போட்டியின் புகைப்படத் தோகுப்பு.