இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி இன்று இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறவிருந்தது.
இன்றைய முதல் நாள் ஆட்டம் மைதானத்தில் பெய்த கடுமையான மழையாழ் போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.30 PM க்கு நாணய சுழற்சி ஆரம்பிக்காமல் தாமதமானது.
இந்தநிலையில் சற்றுமுன்னர் இன்றைய முதல் நாள் ஆட்டம் இடம்பெறாது என்றும், நாளை 2 ம் நாள் ஆட்டம் சற்று முன்னதாக ஆரம்பிக்கும் என்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்திருக்கிறது.
இந்த விடயம் இன்றைய நாளுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு பெருத்த கவலையை தோற்றுவித்துள்ளது.
இந்தநிலையில் நாளையும் மழை காரணமாக போட்டி ஆரம்பிக்க முடியாத நிலையே காணப்படும் என்றே செய்திகள் வெளியாகியுள்ளன.