அமெரிக்க தேசிய அணிக்கு கிரிக்கெட் விளையாட தயாராகும் முன்னணி சுழல் பந்து வீச்சாளர்…!

இலங்கையில் கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்துவிட்டு அமெரிக்காவில் ஒரு புதிய கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்க இலங்கை கிரிக்கெட் வீரரும் ராகம கிரிக்கெட் கிளப்பின் முன்னாள் தலைவருமான அமில அபோன்சோ முடிவு செய்துள்ளதாக்க செய்திகள் வெளியாகியுள்ளன.

மிகசிறந்த சுழற்பந்து வீச்சாளரான அபோன்சோ, ராகம கலகத்துக்காக 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அற்புதமான தாக்கத்தை செலுத்தியவர் ,மேலும் 400 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இறுதியில் கிளப்பின் தலைவராகவும் செயல்பட்டவர் என்பதும் முக்கியமானது.

அபோன்சோ இப்போது அமெரிக்காவில் தொழில் ரீதியாக மாறும் முடிவை மேற்கொண்டுள்ளதுடன், அங்கு அவர் ஒரு வீரராகவும் பயிற்சியாளராகவும் செயல்படுவார் என்றும் அறியவருகின்றது.

கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த ஷெஹன் ஜெயசூரியாவுடன் அமிலா அப்போன்சோவும் மைனர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணிக்காக 9 ஒருநாள் போட்டிகளிலும் 3 இருபதுக்கு இருபது போட்டிகளிலும் அபோன்சோ விளையாடியுள்ளார்.

நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன், பாகிஸதானின் சாமி அஸ்லாம், இலங்கையின் ஷெஹன் ஜெயசூரியாவுடன் அமிலா அப்போன்சோ, இந்தியாவின் சமித் பட்டேல் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் அமெரிக்க தேசிய அணிக்காக கிரிக்கெட் விளையாட ஆயத்தமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.