மிட்செல் மார்ஷ் இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் , பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாட முடியாமல் போகலாம் என அவுஸ்திரேலிய வயிட்பால் கேப்டன் ஆரோன் ஃபின்ச் உறுதிப்படுத்தினார்.
அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு இருபது போட்டிகளைக் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடர் நாளை லாஹுரில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.