இங்கிலாந்து டெஸ்ட் அணியில் திடீர் மாற்றம் -புதுமுகம் அணிக்கு அழைப்பு ..!

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் திடீர் மாற்றம் -புதுமுகம் அணிக்கு அழைப்பு ..!

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்றைய நாளில் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு மொயின் அலி அழைக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் மொயின் அலி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமேதான் விளையாடியிருக்கிறார்.

இந்த நிலையில் லோர்ட்ஸ் ஆடுகளத்தின் தன்மையை கருத்தில் கொண்டு சுழற்பந்து சகலதுறை நட்சத்திரம் 34 வயதான மொயின் அலி அழைக்கப்பட்டார்.

 

இதனைதொடர்ந்து இன்று சுழற்பந்து வீச்சாளர் Dom Bess க்கு பதிலாக புதுமுக வேகப்பந்து வீச்சாளர் சஹீப் மொஹமட்  அணிக்கு கொண்டுவரப்பட்டதாக இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை அறிவித்திருக்கிறது.

சஹீப் மொஹமட் பாகிஸ்தானுடன் நிறைவுக்கு வந்த மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடரில் அதிஅற்புதமான ஆற்றலையும் வெளிப்படுத்தி இருந்ததை குறிப்பிடத்தக்கது.

சுழற்பந்து வீச்சாளர் Dom Bess கழக மட்டப் போட்டிகளுக்குத் திரும்புகிறார் எனவும் இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நாளை (12) Lords  மைதானத்தில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.