இறுதிப் பந்துவரை பரபரப்பை ஏற்படுத்திய கரிபியன் பிரீமியர் லீக்- பிராவோ தலைமையிலான அணி சாம்பியன்..!

இறுதிப் பந்துவரை பரபரப்பை ஏற்படுத்திய கரிபியன் பிரீமியர் லீக்- பிராவோ தலைமையிலான அணி சாம்பியன்..!

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற வந்த கரிபியன் பிரீமியர் லீக் டுவென்டி டுவென்டி தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

அன்ரு  பிளட்சர் தலைமையிலான  லூசியா கிங்ஸ் அணிக்கும் பிராவோ  தலைமையிலான செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பட்ரியட்ஸ் அணிக்கும் இடையிலான இந்த போட்டியில் பிராவோ தலைமையிலான  செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பட்ரியட்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவு செய்திருக்கிறதுு.

முதலில் துடுப்பெடுத்தாடிய பிளட்சர் தலைமையிலான லூசியா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 159ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

டிவைன் பிராவோ தலைமையிலான செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பட்ரியட்ஸ் அணிக்கு இறுதி இரண்டு ஓவர்களில் 21 ஓட்டங்கள் தேவையாக இருந்தது, அதுவும் மிகச் சிறப்பாக டிரேக்ஸ் 24 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பட்ரியட்ஸ் அணிக்கு இறுதி பந்தில் கிண்ணம் வென்று கொடுத்தார்.

கடந்தமுறை புள்ளி பட்டியலில் இறுதி இடத்தில் இருந்த செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பட்ரியட்ஸ் இம்முறைை தொடரின் கிண்ணத்தை சுவீகரித்த உள்ளமை குறிப்பிடத்தக்கதுு.