இறுதிப் போட்டிக்கு தேர்வானது இந்திய லெஜண்ட்ஸ் …!

இந்தியாவில் இடம்பெற்றுவரும் வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

இன்று நிறைவுக்குவந்த இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சச்சின் டெண்டுல்கர் ,சேவாக் ,யுவராஜ் அதிரடி கைகொடுக்க 216 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

பதிலளித்து துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் இறுதிவரைக்கும் இந்தியாவிற்கு கடுமையான நெருக்கடியை கொடுத்தது .

அணித்தலைவர் லாரா ஆடுகளத்தில் இருக்கும் வரை மேற்கிந்திய தீவுகள் வெற்றி பிரகாசமாகவே தெரிந்தது, ஆனாலும் வினய் குமார் மிகச்சிறப்பாக 19வது ஓவரில் விக்கெட்டுகளை வீழ்த்த இதன்மூலமாக இந்திய அணி இறுதியில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வானது.