இறுதி ஓவரில் 3 சிக்சர்கள், போட்டியை Tie ஆக்கிய ஷஹீன் ஷா அப்ரிடி (வீடியோ இணைப்பு)

இறுதி ஓவரில் 3 சிக்சர்கள், போட்டியை Tie ஆக்கிய ஷஹீன் ஷா அப்ரிடி  (வீடியோ இணைப்பு)

ஷஹீன் அப்ரிடியின் வடிவத்தில் முன்னாள் அதிரடி வீர்ர் ஷாஹித் அப்ரிடியை நாங்கள் கண்டோம்:

PSL போட்டிகளில் நேற்று இடம்பெற்ற லாகூர் கலாண்டர்ஸ் கேப்டன் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை அடித்து மிரட்டினார்.

இறுதி ஓவரின் கடைசி ஆறு பந்துகளில் 23 ரன்கள் தேவை, கையில் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இருந்த நிலையில் ஷஹீன் அப்ரிடியின் அதிரடி காட்டி அசத்தினார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் ஏழாவது பதிப்பின் கடைசி லீக் ஆட்டம் லாகூர் கிலாந்தர்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி இடையேயான ஆட்டம் நம்பமுடியாத ஒன்றை உருவாக்கியது. ஆட்டத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கவல்ல இன்னிங்ஸின் கடைசிப் பந்து வீச்சில் ஒரு சிக்ஸர் அடித்து போட்டியை Tie நிலைக்கு கொண்டுசென்று Super over வரை இட்டுச்சென்றார்.

போட்டியில் 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட ஷஹீன் ஷா அப்ரிடி நேற்றைய நாளில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் கதாநாயகனாக விளங்கினார்.

வீடியோ இணைப்பு ?