இலங்கையின் ஆஃப்-ஸ்பின்னர் அகில தனஞ்செய 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார், ஆனால் டி 20 உலகக் கோப்பைக்கான நான்கு பேர்கொண்ட பயண இருப்புக்களில் (Reserve) ஒருவராக இருப்பார் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பயிற்சியாளர் மற்றும் கேப்டனின் விருப்பத்தின் பேரில் அகில தனஞ்செய முதலில் 15 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றார், ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் பந்துவீச்சாளர் ஏராளமான ரன்களைக் விட்டதால், தேர்வாளர்கள் வலது கை லெக்ஸ்பின்னர் புலின தரங்காவை அழைக்க முடிவு செய்துள்ளதாக ‘தி சண்டே டைம்ஸ்’ செய்தித்தாள் அறிக்கை செய்தது.
15 பேர் கொண்ட அணியில் மீண்டும் மூத்த சீமர் நுவான் பிரதீப் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றிருந்த பினுர பெர்னாண்டோவின் இடத்துக்கு 34 வயதான நுவான் பிரதீப் சேர்கப்பட்டுள்ளார்.
இலங்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அணியை அறிவிக்கவில்லை என்றாலும், காலக்கெடுவுக்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் ஐசிசி க்கு பட்டியலை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாத்தியமான இலங்கை அணி:
தசுன் ஷானக (கேப்டன்), தனஞ்சய டி சில்வா (VC), அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், பானுக ராஜபக்ச, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், வனிந்து ஹசரங்க, சாமிக கருணாரத்ன, துஷ்மந்த சமீர, மகீஷ் தீக்ஷன, பிரவீன் ஜெயவிக்ரம, புலின தரங்கா, நுவான் பிரதீப்
மேலதிக வீரர்கள்: லஹிரு மதுஷங்க, லஹிரு குமார, அகில தனஞ்சய, பினுர பெர்னாண்டோ
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடம் பெறவுள்ள உலககோப்பை டுவென்டி20 போட்டிகளுக்கான அணிகளை அறிவிக்கும் இறுதித் திகதி செப்டம்பர் 10ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்தது.
அனைத்து அணிகளும் இதுவரை உத்தியோகபூர்வமாக தமது அணிகளை அறிவித்துள்ள நிலையில், இலங்கை அணி மட்டும் இதுவரை அணியை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவேதான் இப்போது ஒரு சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உத்தியோகபூர்வமாக இலங்கை அணி அறிவிக்காவிட்டாலும், ஐசிசி அனுப்பப்பட்ட 19 பேர் கொண்ட பட்டியலில் இருந்து ஒரு சில வீரர்களை உள்ளிடவும், வெளியேற்றவும் அனுமதி உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை காத்திருப்போம்.
Xxxxxxxxxxcxxxxxxxxxxxxxxxxxxxccxcc
12.00 PM- இலங்கை அணி சற்று முன்னர் தங்களுடைய உறுதிப்படுத்திக் கொண்ட T20 உலக கிண்ண அணியை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
அணி விபரம் வருமாறு ????
இலங்கை அணி:
தசுன் ஷானக (கேப்டன்), தனஞ்சய டி சில்வா (VC), அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், பானுக ராஜபக்ச, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், வனிந்து ஹசரங்க, சாமிக கருணாரத்ன, துஷ்மந்த சமீர, மகீஷ் தீக்ஷன, பிரவீன் ஜெயவிக்ரம, நுவான் பிரதீப், லஹிரு மதுஷங்க
மேலதிக வீரர்கள்:
லஹிரு குமார, அகில தனஞ்சய, பினுர பெர்னாண்டோ, புலின தரங்க
*இங்கே பதிவிடப்படும் செய்திகள் பிரதி செய்யப்படுமாக இருந்தால் தயவுசெய்து நன்றி -விளையாட்டு.com செய்திகள் என குறிப்பிட்டு ஒத்துழையுங்கள்.
இன்னும் விளையாட்டு செய்திகளை அறிந்துகொள்ள இந்த பக்கத்தை லைக் சைய்யுங்கள். ????