இலங்கை கிரிக்கெட் டி20 அழைப்பு லீக் ? பரிசுத்தொகை, செலவு விபரம்..!
தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 2 மில்லியன் ரொக்கப் பரிசு கிடைக்கும்
இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 1.5 மில்லியன் ரொக்கப் பரிசு கிடைக்கிறது.
இறுதி ஆட்டத்தின் நாயகன் மற்றும் தொடரின் நாயகன் தலா 300,000 பரிசு பெறுவார்கள்.
தொடரில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு வீரரும் அவர்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் 10,000 முதல் 15,000 வரை பெறுவார்கள்.
போட்டிகளுக்கு முன் மதிப்பிடப்பட்ட செலவு 60 மில்லியன் ஆக கணக்கிடப்பட்டது, ஆயினும் செலவுகள் இப்போது 90 மில்லியன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்எல்சி டி20 தொடரின் போது வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, ஒரு சில தினங்கள் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
வீரர்கள் வேறு ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டவை உள்ளிட்ட செலவுகள் மற்றும் அடிக்கடி பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்ததன் காரணமாக திட்டமிடப்பட்ட 60 மில்லியனை விடவும் 90 மில்லியன் செலவு ஏற்படுவதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தரப்பு தெரிவித்துள்ளது.
தொடரின் இறுதிப் போட்டியில் நாளை சந்திமால் தலைமையிலான ரெட் அணியும் ஷானக தலைமையிலான கிரே அணியும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.
இரவு 7 மணிக்கு இந்த போட்டி இடம்பெறவுள்ளது.