இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நவம்பரில் டெஸ்ட் தொடர்..!

இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நவம்பரில் டெஸ்ட் தொடர்..!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தின் டெஸ்ட் தொடர் நவம்பர் மாதத்தில் இடம்பெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அடுத்த ஆண்டு இடம்பெறவிருந்த இந்த போட்டிகள் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்படுவதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்த இரண்டு ஆட்டங்களும் காலி மைதானத்தில் இடம்பெறும் ,ஆனால் எந்தெந்த திகதிகளில் போட்டிகள் இடம்பெறும் என்ற விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.