உலகச் சாம்பியன்களுக்கு எதிராக உலக சாதனையை நிலைநாட்டிய இலங்கை -விபரம்..!

உலகச் சாம்பியன்களுக்கு எதிராக உலக சாதனையை நிலைநாட்டிய இலங்கை -விபரம்..!

இலங்கை சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று நிறைவுக்கு வந்தது.

முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா கண்டி பல்லேகல மைதானத்தில் இலங்கையை எதிர்த்து விளையாடியது, இந்த போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியுடன் கூடிய உலக சாதனை படைத்தது.

இலங்கை அணியைப் பொறுத்தவரையில் 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய போது, இலங்கையின் வெற்றிக்கு இறுதி 4 ஓவர்களில் 65 ஓட்டங்கள் தேவையாக இருந்தது.

Death overs சொந்த சொல்லப்படுகின்ற 17வது 18வது 19வது 20வது ஓவர்கள் அடங்கிய அந்த குறித்த நான்கு ஓவர்களிலே ஓர் அணி கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்ற சாதனையாக நேற்றைய வெற்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இலங்கை அணிக்கு இறுதி நான்கு ஓவர்களிலே 65 ஓட்டங்கள் தேவை என்ற நிலைகடந்தை அந்தப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி இறுதி 4 ஓவர்களில் 57 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றமையே உலக சாதனையாக இருந்தது, ஆனால் நேற்றைய போட்டியில் அந்த உலக சாதனையை இலங்கை கடந்து வெற்றி பெற்றிருக்கிறது.

YouTube காணொளிகளுக்கு செல்லுங்கள் ?