உலக சாதனை படைத்து கின்னஸ் சான்றிதளையும் பெற்றுக்கொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ ..!

உலக சாதனை படைத்து கின்னஸ் சான்றிதளையும் பெற்றுக்கொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ ..!

கால்பந்து உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் தன் பெயரை பதித்துக்கொண்டுள்ளார்.

உலக சாதனையாளர்களை கௌரவப்படுத்தும் கின்னஸ் அமைப்பு, ரொனால்டோவின் சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயரை பதித்து அவரின் கைகளுக்கு  சான்றிதழ் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டாரில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண போட்டிகளுக்கு முன்னதாக தற்போது இடம்பெறும் தகுதி காண் போட்டிகளில், கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல் அடித்த ஈரானின் அலி தாயின் உலக சாதனையை முறியடித்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் புதிய சாதனை நிலைநாட்டினார்.

https://vilaiyaddu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AF%8A/

இதன் அடிப்படையிலேயே ரொனால்டோவுக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.